கணவன் மனைவிக்குள்ள பிரச்னைனா சற்று இடைவெளி வருவது இயல்பு. தவிர்க்க முயாதது சில நாட்களில் அவர்களாக நடப்பதுதான். ஆனால் கணவன் மனைவிக்குள் உண்டாகும் இடைவெளியை பேச்சு வார்த்தையின் மூலம் சமன்செய்து அவர்களை ஒன்றாக்குகிறோம் என்ற சொல்லும் ஊர் முக்கியஸ்தர்களால், தேவையில்லாமல் பிரச்னைகள் அதிகமாகி கடைசி வரைக்குமே கணவன் மனைவியும் ஒன்று சேராமல் போய் விடுவதும் நடக்க ஆரம்பித்துள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரி பெருமாத்தூரைச் சேர்ந்த சம்சுதீன் மகன் கம்ருதீனுக்கும், விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் விளக்கூரைச் சேர்ந்த சையத் அமீர் மகள் நஜிமாவுக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எந்தக் குறையுமில்லாமல் நஜிமா பெருமாத்தூரில் கணவர் கம்ருதீனுடன் வாழ்ந்து வந்தார். நன்றாக போய்க் கொண்டிருந்த அவர்களின் குடும்ப வாழ்க்கையில் எதிர்பாராமல் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. உடனே நஜிமா விளக்கூரில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். நான்கைந்து மாதமாக தந்தையுடனே வசித்து வந்தார்.
கல்யாணமான இளஞ்சோடிகள் பிரிந்திருக்கக் கூடாது என்பதற்காக மாப்பிள்ளை வீட்டிலிருந்து 11 பேர் கொண்ட குழு கல்யாணத்தை ஏற்பாடு செய்த விளக்கூர் அகமது பாஷாவிடம் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்த சென்றார்கள். புவனகிரியிலிருந்து சென்ற 11 பேர் குழுவுக்கு விளக்கூர் அகமது பாஷாவுக்கும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது இரு தரப்புக்கும் இடையில் எதிர்பாராமல் தள்ளு முள்ளு ஏற்பட புவனகிரியைச் சேர்ந்த 11 பேர் கொண்ட கும்பல் உடனடியாக ரவடிக் கும்பலாக மாறி பெண் வீட்டாரை தாக்க ஆரம்பித்தாகவும் சொல்லப்படுகிறது. இதில் புவனகிரி சம்சுதீன் தரப்பு பெண் வீட்டிற்குள் புகுந்து பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்த முயன்றிருக்கிறது.
இதை எதிர்த்த பெண்ணின் தகப்பனார் உட்பட பலரையும் சரமாறியாக தாக்கி பெருத்த சேதத்தை உண்டாக்கினார்களாம். இது தொடர்பாக உடனடியாக பெண்ணின் தரப்பினர் காவல்துறையில் புகார் அளிக்க, காவல்துறையினர் புவனகிரியைச் சேர்ந்த சம்சுதீன் கும்பலைச் சேர்ந்த 11 பேரை கைது செய்தனர். சில நாட்களிலேயே கைது செய்யப்பட்ட 11 பேரும் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இவர்கள் எப்படியாவது பெண் வீட்டாரை பழிவாங்கியே தீர வேண்டும் என்று அலைகிறார்கள் என்று அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்கிறார்கள் என்றார் ஒருவர். அடப்பாவிகளே! கணவன் மனைவியை சேர்த்து வைக்க போய்விட்டு, அநியாயமாய் பிரித்து வைத்து விட்டார்களே என்று பெண்ணும் மாப்பிள்ளையும் புலம்பிக் கொண்டுள்ளார்களாம்.
No comments:
Post a Comment