Monday, October 7, 2013

கைதி எண் 3312: அசராத லாலு பிரசாத் யாதவ்


டவுளைக்கூட ஜெயி லில் அடைக்க முடியும்னு இப்பதான் தெரியுது'' என்றார்  பிர்சாமுண்டா மத்திய சிறைச்சாலை முன்பு நின்றிருந்த ராஞ்சி நகரத்து பெண்மணி.

அந்த சிறையில்தான் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் 5 ஆண்டுகால தண்டனை பெற்று, 25 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, எம்.பி. பதவியை இழந்திருக்கும் லாலு பிரசாத் யாதவ் அடைபட்டிருக்கிறார். 

எங்க ஜார்கண்டு மாநிலம் பீகாரோடு சேர்ந்திருந்த வரைக்கும் நான்  லாலுஜிக்குத்தான் ஓட்டுப்போட்டேன். அவரை இப்ப அநியாயமா ஜெயிலில் போட்டுட்டாங்க'' என்று அந்தப் பெண் மணி கலங்கியதுடன், ""கிருஷ்ண பரமாத்மாவே ஜெயிலில்தான் பிறந்தார். லாலுஜிதான் எங்க ளுக்கு கிருஷ்ணன். அவர் மறுபடியும் ஒரு அவதா ரம் எடுப்பார்'' என்றார் நம்பிக்கை குறையாமல். டெல்லி அரசியல் பார்வையாளர்களோ, ராஞ்சி பெண்மணிக்கு நேர் எதிரான கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள். 
ஊழல் செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்ற நிலைமையை நீதிமன்றங்கள் உருவாக்கியிருக்கின்றன'' என்றார் லாலு வுக்குத் தண்டனை வழங்கிய ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி நீதிமன்றத்தின் வாசலில் செய்தி சேகரிப்பில் இருந்த ஆங்கில ஊடகத்தின் சீனியர் செய்தியாளர். (ஊழல் செய்தவங்க தப்பிக்க முடியாதா? தமிழ் நாட்டுக்கு வந்து பாருங்க சார்) 
லாலுவுக்கு 5வருடம், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ராவுக்கு 5 வருடம், பீகாரை ஆளும் ஐக்கிய ஜனதாதளக் கட்சியைச் சேர்ந்த ஜெகதீஷ் சர்மாவுக்கு 4 வருடம் என தண்டனைக் காலத்தை அறிவித்தார் ராஞ்சி மாஜிஸ்ட்ரேட். தீவன ஊழல் வழக்கில் லாலு உள்ளிட்டவர்கள் மீது திங்கட்கிழமையன்றே குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அன்று முதலே சிறைப்படுத்தப்பட்டார்கள். வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாகத்தான் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. "எந்தக் காரணமும் இன்றி இந்த வழக்கில் நான் தண்டிக்கப்பட்டி ருக்கிறேன்' என்று அந்த நிலையிலும் தனக்கேயுரிய பாணியில் சொல்லியிருக்கிறார் சிறையிலிருந்தபடி வீடியோ கான்ஃபரன்ஸில் பதிலளித்த லாலு.

ஜார்கண்ட் உள்ளிட்ட ஒருங்கிணைந்த பீகாரின் முதல்வராக மட்டுமல்ல பிற்படுத்தப்பட்ட, சிறு பான்மையின, ஒடுக்கப்பட்ட மக்களின் நாயகனாக செல்வாக்குப் பெற்றிருந்த லாலுவுக்கு இப்போது சிறை அடையாளம் கைதி எண் 3312. பத்துக்குப் பத்து அளவிலுள்ள செல்தான் அவரது இருப்பிடம். ஒரு மேசை, நாற்காலி, கட்டில், அதன் மேல் மெத்தை, ஓரமாய் ஒரு கழிப்பிடம் இதுதான் செல்லில் உள்ள வசதி. அந்த செல்லில் லாலுவுக்கு முன் இருந்தவர் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா. அவரைத் தொடர்ந்தும் ஒரு வி.வி.ஐ.பிதான் அந்த இடத்திற்கு வந்திருக்கிறார்'' என்கிறார்கள் சிறை அதிகாரிகள். 

சிறைத் தண்டனையைவிட கொசுக்கடிதான் பெரிய தண்டனை' என்கிறார்கள் பிர்சா முண்டா சிறைக்கைதிகள். ""லாலுவுக்கு கொசுவலை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், படுக்கையில் உள்ள மூட்டைப் பூச்சிகளிடமிருந்து அவரால் தப்பிக்கவே முடியவில்லையாம். தூக்கமற்ற இரவுகளைக் கழித்துக்கொண்டிருக்கிறார் முன்னாள் முதல்வர். ஆனாலும் எந்த விமர்சனத்தை பற்றியும் கவலைப் படாத தனி பாணியிலான அவருடைய நடைமுறை களும் உடல்மொழியும் தொடர்ந்தபடியே இருக் கின்றன. இந்த சிறையை கிட்டத்தட்ட ஒரு வர வேற்பறையாகவே மாற்றிவிட்டார் லாலு'' என்கிறார் சிறைத்துறை சைலேந்திர பூஷன். அவரைப் பார்க்க கட்சிப் பிரமுகர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். 

ராஷ்ட்ரிய ஜனதாதள எம்.பி ரகுவன்ஷ் பிரசாத் தனது தலைவரான லாலுவை சந்திக்க வந்தார். அவர் கையில் ஒரு பகவத் கீதை புத்தகம் இருந்தது. “""லாலுஜி இது உங்களுக்குத்தான். உங்க மனதைரியத்துக்கு மேலும் வலிமை சேர்க்கும். காந்திஜி ஜெயிலில் இருந்தபோதெல்லாம் தன் பக்கத்தில் பகவத் கீதையை எப்போதும் வைத்திருந்தாராம். நீங்களும் வச்சுக்குங்கஜி'' என்று கொடுத்துச் சென்றிருக்கிறார். அடுத்தடுத்து வரும் கட்சிப் பிரமுகர்களை சந்திப்பது, மேல்முறையீடு பற்றி விவாதிப்பது, சிறையிலிருக்கும் நாட்களில் கட்சியை யார் மூலம் எப்படி வழிநடத்து வது என்று லாலுவின் பகல் பொழுது கழிகிறது. இரவில் அவருக்கு மூட்டைப்பூச்சிகள்தான் துணை. 

லாலுவின் உடல்நலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவருக்கு உணவு சமைக்கவும், உதவிகள் செய்யவும் இரண்டு கைதிகளை நியமித்திருக்கிறது சிறைத்துறை. ரேஷன் எப்படி என சிறை அதிகாரிகளிடம் கேட்டால், ""அரிசி 350 கிராம், பருப்பு 117 கிராம் (அவ்வளவு துல்லியமா அளப்பார்களோ), காய்கறி 233 கிராம் (அதே துல்லியம்), அதே அளவுக்கு உருளைக்கிழங்கு, 467 கிராம் தயிர், 29 கிராம் நெய், இரண்டு பழங்கள். இதுதான் அவருக்கான அன்றாட உணவுப்பொருள்'' என்கிறார்கள். 

மாட்டுத் தீவன ஊழலில் சிக்கியவர் என்ப தால் லாலுவை கார்ட்டூனாக வரையும்போது மாடு போலவே வரைந்த பத்திரிகைகள் உண்டு. தன் மீதான கேவலமான விமர்சனங்களையும்கூட சகித்துக்கொண்டு, பத்திரிகை செய்திகளைக் கவனிப்பவர் லாலு. சிறையிலும் அவருக்கு காலையில் நியூஸ் பேப்பர்கள் வந்துவிடுகின்றன. பக்கம் பக்கமாக தனக்கு எதிராக எழுதப்பட்டி ருக்கும் செய்திகளைப் படித்துப் புன்னகைத்து, ""நாளைக்கு நான் அப்பீலில் விடுதலையாகும் போது இதைவிட பெரிதாக என் படத்தையும் செய்தியையும் போடுறாங்களான்னு பார்ப்போம்'' என்கிறாராம் லாலு சர்வ அலட்சியமாக. 

சிறை அதிகாரிகளிடம் அவர் தனக்கான இரண்டு தேவைகளைச் சொல்லியிருக்கிறார். ஒன்று, ஃப்ரிட்ஜ். உடல்நலக்குறைவால் மருந்து களை சாப்பிட்டு வரும் லாலுவுக்கு அந்த மருந்து கள் கெட்டுப்போகாமல் பாதுகாப்பாக வைக்க ஒரு ஃப்ரிட்ஜ் தேவைப்படுகிறதாம். அடுத்ததாக அவர் கேட்டிருப்பது, கேபிள் இணைப்புடன் டி.வி. "என்னைப் பற்றி என்னென்ன செய்திகளை ஒளிபரப்புறாங்கன்னு நான் தெரிஞ்சுக்கணும்ல..' என்று சொல்லியிருக்கிறார் லாலு. "அவருடைய இந்த கோரிக்கை பற்றி மாநில அரசிடம் தெரிவிப்போம்' என்கிறார்கள் சிறைத்துறையினர். 

உயர்சாதியினரின் ஆதிக்கத்தில் இருந்த பீகாரின் அரசியலை பிற்படுத்தப்பட்டவர்கள் பக்கம் திருப்பியவர் லாலு. அப்போதிருந்தே அவர் ‘வில்லனாக்கப்பட்டார். இப்போது ஊழல் நாயகன் என்ற முத்திரையுடன் சிறைப்படுத்தப்பட்டி ருக்கிறார். தவறு செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்பதுதான் உண்மையான நீதி. ஆனால், தவறு செய்தவர்கள் எல்லோரும் பாரபட்சமின்றி இந்தியாவில் தண்டனைக்குள் ளாகிறார்களா என்ற கேள்வியை எழுப்பியிருக் கிறது லாலுவுக்கான தண்டனையும் சிறைவாசமும். 

No comments:

Post a Comment