Tuesday, October 1, 2013
ரகசிய படங்கள் இணையத்தில் வெளியானதால் அதிர்ச்சியில் த்ரிஷா!
நடிகை த்ரிஷா தனது தோழிகளுடன் மதுபாட்டில்கள் முன்னால் உட்கார்ந்திருக்கும் படம் இணையதளங்களில் வெளியானது. ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இந்த படம் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அங்கு நடைபெற்ற விருந்துக்கு த்ரிஷா சென்றிருந்தார். அவருடன் நடிகைகள் சங்கீதா, மகேஷ்வரி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இதில் த்ரிஷாவும் அவர் தோழிகளும் உட்கார்ந்திருந்த மேஜை முன்பு மது ஊற்றி வைக்கப்பட்டிருந்தது. இதை யாரோ மர்ம நபர் ரகசியமாக படம் எடுத்து இணையதளத்தில் உலவ விட்டிருக்கிறார். இது குறித்து கேள்விப்பட்ட த்ரிஷா அதிர்ச்சியடைந்துள்ளாராம்.
இந்த விருந்தில் த்ரிஷா நடனமாடியதாகவும் அப்போது ஒருவருடன் மோதல் ஏற்பட்டு வாய்த்தகராறில் ஈடுபட்டதாகவும் த்ரிஷாவை பலர் சமாதானப்படுத்தியும் அவர் கேட்காததால் ஓட்டல் ஊழியர்கள் வந்து அவரை காரில் அனுப்பி வைத்தனர் என்றும் சொல்லப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment