Monday, October 21, 2013

அட்ரா சக்க… அட்ரா சக்க… கவுண்டரும் வந்துட்டாருல்ல?

'காமெடி கிங் ரிட்டர்ன்ஸ்'- வாய்மை படத்தின் கவுண்டமணி!






தமிழ் சினிமா உள்ள வரைக்கும் மறக்க முடியாத நகைச்சுவையைத் தந்தவர்கள் வரிசையில் முக்கிய இடம், இந்தத் தலைமுறையிலும் முதலிடம் யாருக்கு என்றால்... சந்தேகமில்லாமல் அது கவுண்டமணிக்குத்தான்.
சினிமாவில் நடிக்காமல் கொஞ்ச காலம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவர், இன்று சினிமாவில் நிலவும் நகைச்சுவைப் பஞ்சத்தையும் கேவலமான காமெடிக் காட்சிகளையும் பார்த்ததாலோ என்னமோ.. மீண்டும் முழு வீச்சில் நடிக்கக் களமிறங்கிவிட்டார்.
கிங் ஆஃப் காமெடி கவுண்டர் ரிட்டர்ன்ஸ்!
இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்கிறார் கவுண்டர். அதில் ஒருபடம் வாய்மை. இந்தப் படத்தில் கவுண்டமணியுடன் சாந்தனு பாக்யராஜ், ராம்கி, ஊர்வசி, பூர்ணிமா பாக்யராஜ், பானு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
டாக்டர் பென்னி! 
பென்னி என்ற பாத்திரத்தில் மருத்துவ நிபுணராகத் தோன்றுகிறார் கவுண்டமணி. சமூக சீர்கேடுகளை நகைச்சுவையாக சாடும் பாத்திரம் அவருடையது. அவரது காமெடியின் சிறப்பே அதுதானே. அதை இந்தப் படத்திலும் தொடர்கிறார். படத்தை வசந்தபாலனிடம் இணை இயக்குநராக இருந்த செந்தில்குமார் என்பவர் இயக்குகிறார்.
கவுண்டருக்கு நிகரேது... 
நேற்று வெளியான புகைப்படங்களில் கவுண்டமணி கோட் சூட் அணிந்து தனக்கேயுரிய மேனரிசங்களோடு காட்சி தருகிறார். அதில் ஒரு படத்தில், 'இப்ப வர்றதுக்குப் பேரு காமெடியாய்யா... ராமா ராமா' என்பது போல போஸ் கொடுத்திருப்பார்.
மீண்டும் தியாகராஜன்!
 இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் தியாகராஜன். மகனுக்காக நடிப்பதை நிறுத்திக் கொண்டவர், இடையிடையே சிறு வேடங்களில் மட்டும் வந்தவர், இந்தப் படத்தில் மீண்டும் நடித்துள்ளார்.
ஆரோக்கியமான காமெடி இன்னிங்ஸ்! 
வடிவேலுவின் தெனாலிராமன் ஸ்டில்கள் வெளியான அடுத்த நிமிடமே கவுண்டரின் வாய்மை பட புதிய ஸ்டில்களும் நேற்று மாலை வெளியாகின. இந்த ஸ்டில்களைப் பார்த்தபோதே, மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ஆரோக்கியமான காமெடி இன்னிங்ஸ் ஆரம்பமாகிவிட்டதற்கான கொண்டாட்ட மனநிலையில்தான் பலரும் இருந்தனர்.

No comments:

Post a Comment