‘ஆரம்பம்’ படத்தில் ஆர்யாவும், டாப்ஸியும் அதிக நெருக்கம் காட்டியிருப்பதாக அம்பலப்படுத்தியிருக்கிறார் நடிகர் அஜித்.
‘பிக்கப் – ட்ராப்’ இந்த இரண்டு சமாச்சாரங்களிலும் இளம் ஹீரோக்கள் மத்தியில் பெயர் போனவர் நடிகர் ஆர்யா.
இந்த மாதிரியான விஷயங்களில் மத்த ஹீரோக்கள் எல்லாம் ஏங்கிக்கிடக்க ஆர்யாவுக்கு மட்டும் தாரளாமாய் கிடைக்கிறதாம். அதனால் தான் என்னவோ அவரை பற்றி பேச வாயெடுத்தாலே மத்த ஹீரோக்கள் அவரை பொது மேடைகளில் காய்ச்சி எடுத்து விடுகிறார்கள்.
இதில் இப்போது அஜித்தும் சேர்ந்திருக்கிறார். அவரும் தன் பங்குக்கு ஆர்யாவின் ரொமான்ஸ் சீன்கள் ரகசியத்தை இப்போது அம்பலப்படுத்தியிருக்கிறார்.
‘வீரம்’ படத்தின் படப்பிடிப்புக்காக அஜித் வருகிற 20 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 5 ஆம் தேதி வரை ஹைதராபாத் செல்ல இருக்கிறார். அதனால் நேற்று சென்சார் ஆன ஆரம்பம் படம் அவருக்கு ஸ்பெஷலாக போட்டுக்காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த அவர் டைரக்டர் விஷ்ணுவர்தனை வியந்து பாராட்டினாராம்.
அதுமட்டுமில்லாமல் அதே படத்தில் நடித்திருக்கும் ஆர்யாவுக்கும் போனைப் போட்டு படத்துல உங்க நடிப்பு பிரமாதமா இருக்கு. நான் நான் ரொம்ப ரசிச்சேன். குறிப்பா டாப்சியோட நீங்க பண்ற ரொமான்ஸ் சீன்கள் எல்லாமே ரொம்ப ரொம்ப இளமையா இருக்கு என்றாராம். பதிலுக்கு ஆர்யாவுக்கு உங்க படத்துல இதே மாதிரி இன்னொரு சான்ஸ் கெடைச்ச கண்டிப்பா நடிப்பேன் என்றாராம்.
பட் அந்தப்படத்துல டாப்சி இருப்பாங்களான்னு தெரியலையே ஆர்யா…?
No comments:
Post a Comment