Saturday, October 26, 2013

குமுதம் என்னை வைத்து வியாபாரம் செய்கிறது - போட்டுத்தாக்கிய கே.எஸ்.ரவிக்குமார்!



சமீபத்தில் வெளியான குமுதம் வார இதழில் கோச்சடையான் படத்தில் தன்னைப் புறக்கணித்துவிட்டதாக கே.எஸ்.ரவிக்குமாரின் பேட்டி வெளியாகி இருந்தது. இது பற்றி சங்கராபுரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மனம் திறந்து பேசினார் கே.எஸ்.ரவிக்குமார். “என்னுடைய பேட்டி குமுதத்தில் வெளியானதுமே நிறைய தொலைபேசி அழைப்புகள் வந்தன. ‘என்ன உங்களுக்கும் ரஜினி சாருக்கும் ஏதாவது மன வருத்தமா?’ என்றெல்லாம் கேட்டார்கள். என்னுடைய பேட்டியை வைத்து குமுதம் வார இதழ் வியாபாரம் செய்கிறது. அவர்களைப் பொறுத்தவரையில் அது தொழில் தர்மம். ஆனால் போஸ்டரையும் அட்டைப் படத்தையும் மட்டுமே பார்த்துவிட்டு புத்தகத்தைப் படிக்காமல் எனக்கு போன் செய்து விசாரிக்கிறார்கள். முழு பேட்டியையும் படித்தால்தானே உண்மை விளங்கும். என்னுடைய நெருங்கிய நண்பர் எனக்கு போன் செய்தார் ‘உங்களுக்கும் ரஜினிக்கும் என்ன பிரச்சினை…?’ என்று கேட்டார். நான் உடனே போனை பக்கத்தில் இருந்த ரஜினியிடம் கொடுத்தேன். ரஜினி சார் ‘ஹலோ நான் ரஜினி பேசுறேன்… சொல்லுங்க…’ என்று சொல்ல நண்பர் ஆடிப்போய்விட்டார். ‘அது வந்து ஒண்ணுமில்லீங்க…’ என்று சொல்லி சமாளித்தார். எனக்கும் ரஜினி சாருக்கும் ஏதாவது பிரச்சினை என்றால் நான் அவரிடம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பேனா என்ன…? இதன் மூலம் அனைவருக்கும் சொல்லிக்கொள்வது எனக்கும் ரஜினிசாருக்கும் மற்றும் கோச்சடையான் டீமிற்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் நட்புடன்தான் இருக்கிறோம்…’ என்று பேசினார். இதன் மூலம் விஸ்வரூபம் எடுக்கவிருந்த கோச்சடையான் விவகாரத்திற்கு கே.எஸ்.ரவிக்குமார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

No comments:

Post a Comment