Friday, October 11, 2013
இது கதிர்வேலன் காதல் டிரைலர் -ரொம்ப போரடிக்குது பாஸ்… கொஞ்சம் புதுசா யோசிக்கிறது!
உதயநிதி, நயன்தாரா நடிக்கும் இது கதிர்வேலன் காதல் படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் சுந்தர பாண்டியன் படத்தின் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன். ஒரே நாளில் இந்த டிரைலரை சுமார் 50,000க்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளார்கள். சுந்தரபாண்டியன் இயக்குநரின் அடுத்த படம், கதாநாயகி நயன்தாரா, உதயநிதியின் முதல் படத்தின் வெற்றி ஆகியவை இது கதிர்வேலன் காதல் படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. ஆனால் படத்தின் டிரைலர் ஓகே ஓகே படத்தின் டிரைலர் போன்றே இருக்கிறது. என்ன கதாநாயகி மட்டும்தான் மாறியிருக்கிறார் அதில் ஹன்ஸிகா இந்தப் படத்தில் நயன்தாரா அவ்வளவுதான். அதிலும் சந்தானம் காதலுக்கு உதவுகிறார் இதிலும் அப்படியே… அதே குடியும் கும்மாளமும்… ம்… ஹீரோவுக்காக கதை யோசிச்சாலே இப்படித்தான் பிரபாகரன்… கொஞ்சம் உஷாராகிக்குங்க…
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment