Friday, October 11, 2013

நய்யாண்டி நஸ்ரியாவின் கடைசி படமா? இனி வாய்ப்பு கொடுப்பார்களா இயக்குநர்கள்?



நய்யாண்டி படத்தில் குறிப்பிட்ட ஒரு காட்சிக்காக நஸ்ரியா கமிஷனர் அலுவலகம் வரைக்கும் போயிருப்பது அவரை வைத்து படம் இயக்கிவரும் இயக்குநர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. நஸ்ரியா இப்போது திருமணம் என்னும் நிக்காஹ் என்ற படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஜீவாவுக்கு ஜோடியாக நீ நல்ல வருவடா என்ற படத்திலும் நடிக்க உள்ளார். இவற்றில் திருமணம் என்னும் நிக்காஹ் படம் படப்பிடிப்பில் இருக்கிறது. இன்னும் பாதிக்குமேல் முடிந்துவிட்ட இந்தப் படத்தில் மீதமுள்ள காட்சிகள் இப்போது படமாக்கப்பட்டு வருகின்றன. அடுத்து ஜீவாவுடன் நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாரே தவிர இன்னும் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. சற்குணம் மீது அவர் புகார் கொடுத்திருப்பதும், படத்தை தடை செய்ய நீதிமன்றத்துக்கு போவேன் என்று சொல்லியிருப்பதும் அவரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று நினைத்த இயக்குநர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஜீவாவுடன் நடிக்கவிருக்கும் படத்தில் நஸ்ரியா நீக்கப்படுவார் என்றே தெரிகிறது. ஒருவேளை அவ்வாறு நீக்கப்பட்டால் தமிழ் சினிமாவின் கதவுகள் நஸ்ரியாவுக்கு இழுத்து மூடப்படக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment