இந்தா கெளம்பிட்டார்ல… : சந்தானத்துக்கு ஆப்பு வைக்க வரும் வடிவேலு!
காமெடி நடிகர் வடிவேலு மீண்டும் நடிக்க வருவதை கேள்விப்பட்ட பல டைரக்டர்கள் சந்தானத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்ட ஆரம்பித்துள்ளனர். இதனால் கடந்த 2 வருடங்களாக ஸ்டேடியாக இருந்த சந்தானத்தின் சிங்கிள் ஷேர் மார்க்கெட் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.
அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகி ஒருவழியாக அதிலிருந்து மீண்டு வரும் வடிவேலு தற்போது மிகவும் ஃசைலண்ட்டாக நடித்து வரும் படம் தான் ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’.
சுமார் 3 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு அவர் ஹீரோவாக நடித்து வரும் இந்தப்படத்தை யுவராஜ டைரக்ட் செய்து வருகிறார். முன்னதாக வடிவேலுஇம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படத்தின் 2-ஆம் பாகத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்தப்படத்தின் டைரக்டர் சிம்புதேவனுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அந்தப்படம் அப்படியே நின்று விட்டது.
இந்நிலையில் தான் வடிவேலு ஜெகஜால புஜபல தெனாலிராமன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டானார். போட்டா போட்டி படத்தை டைரக்ட் செய்த யுவராஜ் டைரக்ட் செய்து வரும் இந்தப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து வருகிறது.
இந்தப்படத்தில் வடிவேலு ஜோடியாக நடிக்க பார்வதி ஓமனக்குட்டன், சினேகா உல்லால் என பல ஹீரோயின்களையும் கேட்டுப் பார்த்தார்கள். ஆனால் வடிவேலு ஹீரோ என்பதால் யாருமே நடிக்க முன்வரவில்லை.
இறுதியாக நடிகை மீனாட்சி தீட்சித் என்ற தெலுங்கு படங்களில் குத்தாட்டம் போட்டவர் நடிக்க ஓ.கே சொல்லியிருக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் விஜயகாந்த்தின் விருதகிரி படத்தில் நடித்தவர் என்பது இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்.
இதற்கிடையே வடிவேலுவின் வரவால் சிங்கிள் காமெடியனாக தமிழ்சினிமாவில் கோலோச்சி வரும் சந்தானத்தின் மார்க்கெட் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.
தெனாலிராமன் படத்தில் வடிவேலு மீண்டும் நடிப்பதை கேள்விப்பட்ட பல தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் அவரை நேரில் சந்தித்து மீண்டும் தங்களது படங்களில் காமெடியனாக நடிக்கக் கூப்பிட ஆரம்பித்திருக்கிறார்களாம்.
இன்னும் சில டைரக்டர்களோ தெனாலிராமன் படம் ரிலீசானவுடன் வடிவேலுவை தங்கள் படங்களின் காமெடிக்காக கமிட் பண்ண முடிவு செய்திருக்கிறார்களாம். இதனால் சமீபகாலமாக சந்தானத்தை தேடிப்போகும் பட சான்ஸ்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது.
No comments:
Post a Comment