‘கொழுக் மொழுக்’ ஹன்ஷிகாவைப் பார்த்ததும் ‘பழைய கள்ளு’ த்ரிஷாவை ஓரம் கட்டியிருக்கிறார் டைரக்டர் தரணி.
ஷங்கரின் ‘ஐ’ படத்துக்குப் பிறகு தரணி டைரக்ஷனில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார் நடிகர் விக்ரம். ‘ராஸ்கல்’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக யாரைப் போடலாம் என்று ஹீரோயின் செலக்ஷனை முடிக்கி விட்டிருந்தார் தரணி. மும்பை வரை போயும் கூட யாருமே விக்ரமுக்கு செட்டாகவில்லை.
தரணி, விக்ரம் காம்பினேஷன் என்பதால் அதில் தன்னைத்தான் நடிக்கக் கூப்பிடுவார் தரணி என்று ரொம்பவே ஆவலோடு காத்திருந்தார் த்ரிஷா.
ஆனால் கொழுக் மொழுக் ஹன்ஷிகாவைப் பார்த்ததும் தரணிக்கு வேறு ஹீரோயினைத் தேடும் ஆசையே போய் விட்டதாம். என்னாப் பொண்ணுடா…என்று ஹன்ஷிகாவைப் பார்த்ததும் பிடித்துப் போக, உடனே ஒரு பெரிய தொகையை கையில் அட்வான்ஸாக கொடுத்து கமிட் செய்து விட்டார் தரணி.
தரணி வருவார்… சான்ஸ் தருவார்… என்று வீட்டு வாசலையே திறந்து வைத்து காத்திருந்த த்ரிஷாவுக்கு இந்த கமிட்மெண்ட் விவகாரம் தெரியவர காண்டாகி விட்டாராம் த்ரிஷா.
த்ரிஷாவின் அம்மா விக்ரமுக்கும், தரணிக்கு ரொம்ப க்ளோஸ் என்பதால் தனக்காக இல்லாவிட்டாலும் தனது அம்மாவுக்காக இந்தப்பட வாய்ப்பை தரணி தனக்கு தருவார் என்று நம்பிக்கையோடு காத்திருந்தாராம் த்ரிஷா.
ஆனால் திமிங்கலமே கையில சிக்கும்போது சாலைமீனுக்கு யாராவது ஆசைப்படுவாங்களா..?என்று எஸ்கேப் ஆகி விட்டார் தரணி.
இப்போ புரியுதா? ஏன் சிம்பு ஹன்ஷிகாவை பிக்கப் பண்ணினார்னு…
No comments:
Post a Comment