‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் அசால்ட்டான நடிப்பை கொடுத்து அட… யாருய்யா இந்தப்பையன் என்று கேட்க வைத்தவர் தான் நடிகர் ஆர்யா.
அன்றிலிருந்து அவருடைய பிக்கப்-ட்ராப் சமாச்சாரங்கள் எல்லாமே தமிழ்சினிமாவில் அறிந்தும்-அறியாதது போல் பிரபலமாகி விட்டது.
நேற்று யாருடன் பிரியாணி சாப்பிட்டீங்க..என்று கேட்டால் கூட உடனே சொல்ல முடியாத அளவுக்கு பிக்கப் ராஜாவாக வலம் வரும் ஆர்யாவின் அடுத்த பிக்கப் யார் தெரியுமா?
நேற்று யாருடன் பிரியாணி சாப்பிட்டீங்க..என்று கேட்டால் கூட உடனே சொல்ல முடியாத அளவுக்கு பிக்கப் ராஜாவாக வலம் வரும் ஆர்யாவின் அடுத்த பிக்கப் யார் தெரியுமா?
நடிகர் கமலின் மகள் ஸ்ருதிஹாசனாம்.
ஏழாம் அறிவு, 3 படங்களுக்குப் பிறகு தெலுங்கில் பிஸியாகி விட்ட ஸ்ருதி அங்கிருந்த படியே ஹிந்திப் படங்களில் பிஸியாகி விட்டார். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இங்கேயே வாழ்ந்து வரும் ஸ்ருதியை மட்டும் கை விட்டு விட, வேறு வழியில்லாமல் ஆந்திரா பக்கம் போனார்.
இப்போது கமலே கூப்பிட்டாலும் வர முடியாத அளவுக்கு அவரது கையில் படங்கள் உள்ளன. என்றாலும் தமிழில் நல்ல ஸ்க்ரிட்டுகள் அமைந்தால் எந்த நடிகைக்குத்தான் பிடிக்காது.
அப்படி ஒரு ஸ்க்ரிப்ட் மேனியாவில் தான் ஆர்யாவிடன் சிக்கிக் கொண்டார் ஸ்ருதி.
தற்போது ஜனநாதன் டைரக்ஷனில் புறம்போக்கு படத்தில் நடித்து வரும் ஆர்யா அடுத்து ‘தடையறத்தாக்க’ டைரக்டர் மகிழ் திருமேனியின் டைரக்ஷனில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் தான் ஆர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதியை கேட்டுப் பார்க்கலாமே என்று நூல் விட்டுப் பார்த்திருக்கிறார் டைரக்டர் திருமேனி. அவர் சொன்ன ஸ்கிரிப்ட்டில் அசந்து போனவர் உடனே உங்க படத்துக்கு கால்ஷீட் ரெடி என்று சொல்லி விட்டாராம்.
ஹீரோ ஆர்யா என்று சொன்ன பிறகும் ஹீரோ யாரா இருந்தாலும் எனக்கு ஸ்க்ரிப்ட் தான் முக்கியம் என்று போளேர் பதிலைச் சொன்னாராம் ஸ்ருதி.
அதுதானே புலிக்கு பிறந்தா அது பூனையாவா இருக்கும்?
No comments:
Post a Comment