Tuesday, October 1, 2013

சென்னை பேருந்தில் பெண்களை உரசும் மிருக ஜென்மங்கள்!



சென்னையில் ஒரு பொண்ணு கூட்டத்துடன் வரும் நகரப் பேருந்தில் ஏறினால் இறங்குறதுக்குள்ள ஒரு வழியாகிடுறாங்க. காரணம் பேருந்தில் வரும் இடிமன்னர்கள்தான். பெண்களை உரசும் இந்த மிருக ஜென்மங்களின் தொல்லையில் இருந்து தப்பிப்பதற்குள் பெண்களுக்கு போதும் போதும் என்றாகிவிடுகிறது. சென்னையில் மட்டும்தான் இப்படி இருக்குமோன்னு பார்த்தா, இந்தியா முழுக்க பெரு நகரங்களில் இதே நிலைதான் போலிருக்கிறது. அதனால இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக இந்தியா முழுவதும் உள்ள பெரு நகரங்களில் உள்ள பேருந்துகளில் பெண்களுக்கு மட்டும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறதாம். சென்னையில் இது போன்ற மகளிர் மட்டும் பேருந்துகள் ஓடுகின்றன என்றாலும் அவை அத்திப் பூத்தார் போர் கல்லூரி அலுவலக நேரங்களில் மட்டும் ஒன்றோ ரெண்டோ வருகின்றன. கொஞ்சம் தாமதமாகிவிட்டாலும் இந்த பேருந்தை விட்டுவிட்டு மற்ற பேருந்தில் சிக்கி அவஸ்தைப் படுகின்றனர் பெண்கள். அது போல ரயில்களிலும் பெண்களுக்கான பெட்டியின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. பெண்கள் பெட்டியில் பயணம் செய்யவே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். இருபாலரும் சேர்ந்து பயணிக்கும் பெட்டிகளில் ஆண்களின் காரமான பார்வையும், நடவடிக்கையும் பயத்தை அளிப்பதாக பெண்கள் கூறுகிறார்கள். கோவையில் பெண்களுக்காக மட்டும் பூங்கா திறக்கப்பட உள்ளது. இவை எல்லாவற்றிலும் ஒரு படி மேலாக மத்திய அரசு, பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் மகளிர் மட்டும் வங்கி சேவையை வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. ஆனால், “பெண்கள் இப்படி மகளிர் மட்டும் ஐ தேடி ஓடுவது நல்லதல்ல. மாற வேண்டியது பெண்கள் அல்ல ஆண்கள் தான்… அவர்களின் மனநிலைதான்…” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

No comments:

Post a Comment