ஒரு பாடல் காட்சியில் படு கவர்ச்சியாக நடித்திருப்பதால் படத்தை தமிழில் ரிலீஸ் செய்ய எதிர்க்கிறார் என்று ஹன்ஷிகா மோத்வானி மீது குற்றம் சாட்டியிருக்கிறார் படத் தயாரிப்பாளர் எஸ்.சுந்தரலட்சுமி.
சிவம் அசோசியேட்ஸ் சார்பில் எஸ்.சுந்தரலட்சுமி தயாரித்து கொண்டிருக்கும் “ரவுடி கோட்டை”படத்தை தமிழில் திரையிட அனுமதிக்க கூடாது என்று ஹன்சிகா மோத்வானி நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார் என்று ஒரு நாளிதழ் செய்தி வெளிட்டுள்ளது. அதுபற்றி தயாரிப்பாளர் எஸ்.சுந்தரலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :
தெலுங்கில் வெளியான “சீதாராமகல்யாணம் லங்கலோ” என்ற படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்ய அதன் தயாரிப்பாளர் வெல்கார் எண்டர்பிரைசஸ்,விஜய்மல்லா பிரசாத் என்பவரிடமிருந்து வாங்கினேன் படத்தின் மொழிமாற்றம் மற்றும் அனைத்து வேலைகளையும் முடித்து “ரவுடி கோட்டை” என்ற பெயரில் திரையிட முடிவான நேரத்தில் இது மாதிரி ஒரு புகார் குறித்து அதிர்ச்சி அடைந்தேன்.
நடிகை ஹன்சிகாவுக்கும் தெலுங்கு பட அதிபருக்கும் இடையே எந்த மாதிரியான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுருக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது. நாங்கள் அந்த தயாரிப்பாளரிடம் கேட்டோம்.
அதற்கு அவர் ஹன்சிகா சொல்லவது மாதிரி தெலுங்கை தவிர வேறு எந்த மொழியிலும் மொழிமாற்றம் செய்ய கூடாது என்று ஒப்பந்தம் எங்களுக்குள் எதுவும் இல்லை. வாய்மொழியாகக் கூட அவர் கேட்கவும் இல்லை. நாங்களும் வாய்மொழியாக கூட ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறினார்.
அப்படி ஹன்சிகா தடை கேட்டோ, வழக்கு தொடர்வதாகவோ இருந்தால் தெலுங்கு பட அதிபர் மீது தான் தொடர வேண்டும். எங்கள் மீது அவர் எடுக்கும் எந்த நடவடிக்கையும் எங்களை கட்டுப்படுத்தாது. இதை ஹன்சிகாவுக்கும் அவர் சம்மந்த பட்டவர்களுக்கும் தெரிவித்து கொள்கிறோம்.
மேற்படி ஹன்சிகா நடிகர் சங்கத்தில் எங்கள் மீது எடுத்த நடவடிக்கையை விலக்கி கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஹன்சிகா மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க நேரிடும்.
ஏற்பட்டுள்ள நஷ்டத்தையும் ஹன்சிகா தான் ஏற்க வேண்டும் என்றார் எஸ். சுந்தரலட்சுமி.
இதுபற்றி இந்த படத்தின் தமிழாக்கம் பொறுப்பேற்று இருக்கும் எ.ஆர்.கே.ராஜராஜா கூறியதாவது :
“ரவுடி கோட்டை” படத்தில் ஹன்சிகா “இச் இச் இச் ”என்ற ஒரு பாடல் கட்சியில் படு கவர்ச்சியாக நடித்திருக்கிறார். அதனால் பயந்து போய் ஹன்சிகா தடை கேட்டிருப்பார் என்று நினைக்கிறேன் என்றார்.
ஒருவேளை சிம்புவுக்கு பயந்திருப்பாரோ என்னவோ..?
No comments:
Post a Comment