நாலு நாளைக்கு முன்னால கூட நய்யாண்டியா அது யாரு நடிச்ச படம் என்றுதான் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் எப்போது நஸ்ரியா தொப்புள் விவகாரத்தை கையில் எடுத்தாரோ அதில் இருந்து படம் பற்றிய செய்திகளும் பரபரப்பாக மீடியாவில் இடம் பிடிக்க ஆரம்பித்தன. இரண்டே நாட்களில் எல்லோரையும் ரீச் ஆகிவிட்டது நய்யாண்டி. சொட்டவாளக்குட்டியாக ஆரம்பித்த நய்யாண்டி இன்று தொப்புள் நய்யாண்டியாக ரசிகர்கள் மத்தியில் வலம் வர ஆரம்பித்திருக்கிறது. களவாணி படத்தை வெற்றிப் படமாகவும் வாகை சூடவாவை விருது படமாகவும் இயக்கிய சற்குணம் இந்தப் படத்தை எந்தவகை படமாக இயக்கியிருக்கிறார்?
ஊருல ஒரு பாட்டி, அந்த ஊரு திருவிழாவுக்கு வருகிற கதாநாயகி, அவளை ஒருதலையாக காதலிக்கிற கதாநாயகன், அவள் தன்னைக் காதலிப்பதற்காக ஹீரோ மெனக்கெடுவது இதையெல்லாம் காலாகாலமாக எத்தனை படங்களில் பார்த்திருப்போம். அதையே கொஞ்சம் தன்னுடைய ஸ்டைல் கலந்து கொடுத்திருக்கிறார் சற்குணம்.
மரியானிலேயே நடிப்பில் பிச்சு உதறிவிட்ட தனுஷ்க்கு இந்த படத்தின் கேரக்டர் எல்லாம் ஒரு சுண்டக்காய்தான். சின்ன வண்டு என்னும் கேரக்டரில் வருகிறார் தனுஷ். இவரும் சூரியும் சதீசும் சேர்ந்து அடிக்கிற ரகளைக்கு அளவே இல்லை. ரொம்பவே சிரிக்க வைக்கிறார்கள்.
தொப்புள் புகழ் நஸ்ரியா பல் மருத்துவராக வருகிறார். நேரம் படத்தில் இருந்த அழகில் பாதிகூட அம்மணியிடம் இல்லாதது போன்று தெரிகிறது. இவரது பாட்டியாக வருகிறார் நடிகை சச்சு.
படம் பார்க்கிறவங்க காது கிழியுறமாதிரி நான் ஸ்டாப்பாக சத்தமா டயலாக் பேசி காமெடி பண்ணுகிற சூரியை இந்தப் படத்தில் அளவாக பேச வைத்து காமெடி பண்ண வைத்திருக்கிறார் சற்குணம். இவருடனே வந்து சிரிக்க வைக்கிறார் சதீஷ்.
ஜிப்ரனின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.
படத்தை இயக்கியிருக்கிறார் சற்குணம். தனுஷ் கால்ஷீட் கிடைத்ததால் இந்தப் படத்தை இப்படி எடுத்துவிட்டாரோ என்னவோ…
தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தை தயாரித்த கதிரேசன்தான் இந்தப் படத்தையும் தயாரித்திருக்கிறார். அந்தப் படத்திற்கு விருதாவது கிடைத்தது. ஆனால் இந்தப் படத்திற்கு…?
ம்… ஆக மொத்தத்தில நய்யாண்டியை எடுத்து தயாரிப்பாளர் ஓட்டாண்டி ஆகாம இருக்க ரசிகர்கள்தான் கைகொடுக்கணும்… ம்… பார்க்கலாம்…
No comments:
Post a Comment