கஜினியை தொடர்ந்து மீண்டும் சூர்யா - ஏ.ஆர்.முருகதாஸ் ஒன்றிணைகிறார்கள். இவர்கள் இணையும் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் தயாரிக்கிறது.
இந்தி கஜினிக்குப் பிறகு பாலிவுட்டில் படம் இயக்க முருகதாஸுக்கு ஏகப்பட்ட அழைப்புகள். முருகதாஸும் ஷாருக்கானை சந்தித்து கதை கூறினார். கதை ஷாருக்கிற்கு பிடித்திருந்தாலும் உடனே நடிக்க முடியாத நிலை. கரண் சூஜாஹரின் மை நேம் இஸ் கான், பர்கான் அக்தரின் டான் இரண்டாம் பாகம் என இரு படங்கள் ஷாருக்கின் கைவசம் உள்ளது. இவற்றை முடித்த பிறகே புதிய படம் குறித்து அவர் யோசிக்க முடியும்.
இந்த இடைவெளியில் வேறு நடிகரை வைத்து படம் இயக்க முருகதாஸ் தீர்மானித்துள்ளார். அனேகமாக அந்த ஹீரோ சூர்யாவாக இருப்பார். தமிழில் தயாராகும் அந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார்.
தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஆதவன் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் உதயநிதி ஸ்டாலினே தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. ஆதவனைத் தொடர்ந்து ஹரியின் சிங்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்த இரு படங்களுக்குப் பிறகு அவர் முருகதாஸின் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Thursday, July 2, 2009
முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment