Thursday, July 2, 2009

லட்சுமிராயின் நடிகை வேடம்

முத்திரை படத்தில் பார் டான்சராக இளைஞர்களை உலுக்கியெடுத்திருக்கிறார் லட்சுமிராய். காஸ்ட்யூமை குறைக்கணுமா?
கட்டிப்பிடித்து நடிக்கணுமா? உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கணுமா? அனைத்துக்கும் லட்சுமிராய் ரெடி. சென்சார் கத்தி‌ரிக்கெல்லாம் இவர் பயப்படுவதாக தெ‌ரியவில்லை.

செல்வாவின் நான் அவன் இல்லை இரண்டாம் பாகத்தில் தனது மிச்சம் மீதி திறமை அனைத்தையும் திரையில் கொண்டு வந்திருக்கிறார் லட்சுமிராய். குறிப்பாக பாடல் காட்சியில்.

நான் அவன் இல்லையில் நடிகையாக வருகிறாராம் இவர். படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்கிறவர் ‌ஜீவனிடம் மனதை பறி கொடுப்பதாக கதை. கதையே வெளிநாட்டில் நடப்பதால் அங்கேயே பாடல் காட்சியையும் எடுத்திருக்கிறார்கள். மினி ஸ்கர்ட்டில் மிரட்டியிருக்கிறாராம் இந்த பெங்கால் பியூட்டி.

நான் அவன் இல்லையின் இன்னொரு விசேஷம் இசை. முதல் பாகத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். நாக்க முக்க வெற்றிக்குப் பிறகு அவர் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டதால் இரண்டாம் பாகத்தில் அவருக்குப் பதில் பட்ஜெட் படங்களின் பாதுகாவலர் டி.இமானை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

பெண்களை போகப் பொருளாக நினைக்கும் மன்மதனைப் பற்றிய கதை என்பதால் பாகவத‌ரின் புகழ் பெற்ற மன்மத லீலையை வென்றார் உண்டோ பாடலை அப்படியே உல்டா செய்து பயன்படுத்தியிருக்கின்றனர். மன்மத லீலையை வென்றார் உண்டோ என்பதற்குப் பதில் மன்மத லீலையை வென்றவன் இவனன்றோ என தொடங்குகிறது பாடல். பாடலை பா.விஜய் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலில் படத்தின் நாயகிகள் லட்சுமிராய், ஹேமமாலினி, ரக்ஷனா, ஸ்வேதா ஆகியோர் ‌ஜீவனுடன் ஆடியுள்ளனர்.

No comments:

Post a Comment