ரீமிகஸ் என்ற பெயரில் பழைய பாடல்களை கொத்துப் பரோட்டா போடுகிறார்கள் கோடம்பாக்கத்தில். தட்டிக் கேட்டும் இந்த அநியாயத்துக்கு யாரும் தடை போடுவதாக இல்லை.
இந்நிலையில் கதை படத்தைப் பற்றி காதில் விழுந்த சேதி பழையப் பாடல்களை ரசிப்பவர்களுக்கு காதில் தேன் வந்து பாயும் தித்திப்பை கொடுத்திருக்கிறது.
மோகமுள் அபிஷேக் இயக்கும் கதையில் ஷான், நிவேதிதா, அபிநய் ஆகியோர் அறிமுகமாகிறார்கள். டீன்ஏஜ் கதை. பால் ஜேக்கப் படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் சிவாஜி கணேசனின் புகழ் பெற்ற மூன்று பாடல்களை பயன்படுத்துகிறார்கள். ஒன்று, ஆஹா மெல்ல நட... இரண்டாவது, உன்னை ஒன்று கேட்பேன்... மூன்றாவது, கொடி அசைந்ததும் காற்று வந்ததா...
இந்த மூன்று பாடல்களையும் ரீமிக்ஸ் என்ற பெயரில் மிதித்து நசுக்காமல் அப்படியே அந்த பழைய டியூனிலேயே பயன்படுத்துகிறார்கள். டீன்ஏஜ் கதையில் மூன்று பழைய பாடல்களை டியூனைக் கூட மாற்றாமல் பயன்படுத்துவதற்கு தனியாக பாராட்டு கூட்டமே நடத்தலாம் இசையமைப்பாளர் பால் ஜேக்கப்புக்கும், இயக்குனர் அபிஜேக்குக்கும்.

No comments:
Post a Comment