Showing posts with label ர‌ஜினி. Show all posts
Showing posts with label ர‌ஜினி. Show all posts

Monday, June 29, 2009

சிம்புவின் சீக்ரெட் லிஸ்ட்


என்னத்த க‌ண்ணையாவின் வரும்... ஆனா வராது... காமெடியின் நிலையில் இருக்கிறது போடா போடி. படம் வரும் என்கிறார் படத்தின் இயக்குனர். வராது என்கிறார்கள் ஹீரோ சிம்பு தரப்பில். நடுவில் வில்லங்கமாக வந்திருக்கிறது வாலிபன் படம்.

நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயா‌ரிப்பில் சிம்பு நடிப்பதாகக் கூறப்படும் வாலிபன் படம் குறித்தும் பல வதந்திகள். அப்படியொரு ப்ராஜெக்டே இல்லை என்கிறார்கள் சிலர். சிம்புவும் இதுகுறித்து உறுதியாக எதையும் கூறவில்லை. அதேநேரம் வாலிபன் படத்தில் நடிக்கும் ஹீரோயினை தேர்வு செய்ய முழுவீச்சில் இறங்கியிருக்கிறார் சிம்பு.

சிம்புவின் முதல் சாய்ஸ் இலியானா. அ‌ஜித், விஜய், சூர்யா, விக்ரம்... ஏன் ர‌ஜினியுடனேயே நடிக்க மறுத்தவர் இலியானா. அவரை எப்படியாவது வாலிபனில் நடிக்க வைப்பது என முயன்று வருகிறார் சிம்பு. அவர் ஒத்து வராதபட்சத்தில் சினேகா உல்லால், அனுஷ்கா என வேறு சிலரையும் லிஸ்டில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

விண்ணைத் தாண்டி வருவாயா முடிந்த பிறகு சிம்பு படத்தில் நடிக்குப் போகும் அதிர்ஷ்டசாலி யார் என்பது தெ‌ரிந்துவிடும்.

Monday, June 22, 2009

த்‌ரிஷா படத்துக்கு ர‌ஜினி பெயர்


த்‌ரிஷாவின் நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகிறதோ இல்லையோ. மாசத்துக்கு ஒரு டப்பிங் படம் டாணென்று வந்துவிடுகிறது.

இந்த மாதம் ரவிதேஜாவுடன் நடித்த மதுர திமிரு ‌ரிலீஸானது. அடுத்து தயாராக இருப்பது, குமரன் ர‌ஜினி ரசிகன்.

ர‌ஜினி படப் பெயரை பயன்படுத்துவதுபோய் இப்போது ர‌ஜினி பெயரை நேரடியாகவே பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஆனாலும், இந்தப் படத்துக்கு ர‌ஜினி பெயர் சாலப் பொருத்தம். காரணம் படத்தின் ஹீரோ பிரபாஸ் ர‌ஜினி ரசிகராக நடித்திருக்கிறார்.

தெலுங்கில் பூ‌ரி ஜெகன்நாத் இயக்கிய புச்சிக்காடு மேட் இன் சென்னை என்ற படம்தான் குமரன் ர‌ஜினி ரசிகனாக தமிழ் பேசயிருக்கிறது. இந்தப் படத்தில் சென்னையில் வசிப்பவராக வருகிறார் பிரபாஸ். கதைப்படி அவர் தீவிர ர‌ஜினி ரசிகர். அவரது காதலியாக த்‌ரிஷா நடித்துள்ளார். தெலுங்கு படத்தின் தொடக்க விழாவில் ர‌ஜினி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் வெற்றிபெற்ற இப்படத்தை லட்சுமி வெங்கடேஸ்வரா நிறுவனம் தமிழில் வெளியிடுகிறது. படம் ஆகஸ்டில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.