த்ரிஷாவின் நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகிறதோ இல்லையோ. மாசத்துக்கு ஒரு டப்பிங் படம் டாணென்று வந்துவிடுகிறது.
இந்த மாதம் ரவிதேஜாவுடன் நடித்த மதுர திமிரு ரிலீஸானது. அடுத்து தயாராக இருப்பது, குமரன் ரஜினி ரசிகன்.
ரஜினி படப் பெயரை பயன்படுத்துவதுபோய் இப்போது ரஜினி பெயரை நேரடியாகவே பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஆனாலும், இந்தப் படத்துக்கு ரஜினி பெயர் சாலப் பொருத்தம். காரணம் படத்தின் ஹீரோ பிரபாஸ் ரஜினி ரசிகராக நடித்திருக்கிறார்.
தெலுங்கில் பூரி ஜெகன்நாத் இயக்கிய புச்சிக்காடு மேட் இன் சென்னை என்ற படம்தான் குமரன் ரஜினி ரசிகனாக தமிழ் பேசயிருக்கிறது. இந்தப் படத்தில் சென்னையில் வசிப்பவராக வருகிறார் பிரபாஸ். கதைப்படி அவர் தீவிர ரஜினி ரசிகர். அவரது காதலியாக த்ரிஷா நடித்துள்ளார். தெலுங்கு படத்தின் தொடக்க விழாவில் ரஜினி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் வெற்றிபெற்ற இப்படத்தை லட்சுமி வெங்கடேஸ்வரா நிறுவனம் தமிழில் வெளியிடுகிறது. படம் ஆகஸ்டில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment