‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தில் அறிமுகம் ஆன பூர்ணா அந்தப் படத்தில் சின்னத் தளபதி பரத்துடன் ஜோடி போட்டார்.
தன்னுடன் ஜோடி போட்ட சந்தோஷத்தில் தானோ என்னவோ தான் கலந்து கொண்ட விழா ஒன்றில் நடிகர் பரத் பூர்ணாவை நடிகை அசின் போலவே இருக்கிறார் (?) என்று சொல்ல பூர்ணா உள்ளம் குளிர்ந்து போனார். ஆனால் பரத், பூர்ணா அசின் போலத்தான் இருக்கிறார் என்று சொன்னதற்கே அம்மணி இவ்வளவு சந்தோஷப்பட்டார் என்றால் அசின் மாதிரி நடிக்கிறார் என்று யாராவது சொன்னால் எவ்வளவு சந்தோஷப்படுவார். ஆனால் பூர்ணாவோ நடிப்பு என்றால் என்ன என்று கேட்பார்.
இருப்பினும் மலையாளக்கரையோரத்தில் இருந்து வந்த பூர்ணா தற்போது ‘துரோகி‘ படத்தில் ஸ்ரீகாந்துடனும், ‘அர்ஜூனன் காதலி’ படத்தில் ஜெய் உடனும் ‘கந்தக்கோட்டை’யில் நகுலுடனும் ‘வித்தகன்’ படத்தில் பார்த்திபனுடனும் நடித்து வருகிறார். நான்கு படங்களிலும் இவருக்கு முற்றிலும் மாறுபட்ட வேடங்கள். இவர் கன்னடத்தில் நடித்து சமீபத்தில் வெளியான ‘ஜோஷி’ படம் சூப்பர் ஹிட்டாக ஓடியது.
எல்லாம் சரி... கொஞ்சம் நடிக்கவும் ஆரம்பிச்சா நல்லா இருக்கும்!
No comments:
Post a Comment