நரிக்கு மச்சு வீடு கிடைச்சா சிங்கத்தை பார்த்து சௌக்யமான்னு கேட்குமாம். வீடு கொள்ளாமல் வெற்றி கோப்பைகளை அடுக்கி வைத்திருந்தாலும், உள்ளூரு ஓட்டப்பந்தயத்தில் நொண்டியடிச்ச மாதிரி ஆயிருச்சு மீரா ஜாஸ்மினின் கேரியர். வந்தவங்க, போனவங்க, நின்னவங்க, நொடிச்சவங்கன்னு யாரு கூடவும் ஜோடி போட தயாராகிட்டாரு. வேடிக்கை என்னவென்றால், கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருக்கு தங்கச்சியாக நடிக்கிறார் மீரா ஜாஸ்மின். ஆனால் அவருக்கு ஜோடியாக நடிப்பது நம்ம மோனிகா. சிலந்தி படத்திலே தண்ணீரில் மூழ்கி தத்தளிக்க வச்சாங்களே, அவங்களேதான்.
சென்னைக்கு வந்ததும் சும்மாயில்லாம, நான் சிவாராஜ் குமாருக்கு ஜோடியாக நடிக்கிறேன். மீரா ஜாஸ்மின் அவருக்கு தங்கச்சியா நடிக்கிறாங்க என்று சொல்லி வருகிறாராம். இதுக்கெல்லாம் கவலைப் படுகிறவரா மீரா.
இதற்கிடையில் தனக்கென்று ஒரு வெப்சைட் துவங்கியிருக்கிறாராம் மோனிகா. தமிழில் நான் படங்களை ஒப்புக் கொள்ளவில்லை. காரணம், நான் நடிச்ச வர்ணம் படம் வந்திட்டா, தமிழில் நான் எதிர்பார்த்த கேரக்டர்களும் எனக்கு கிடைக்கும். எனக்கென்று ஒரு அடையாளத்தையும் உருவாக்கிக்க முடியும். அதனால் அந்த படத்தின் ரிலீசுக்கு பிறகுதான் தமிழ் படம். அதுவரைக்கும் கன்னடத்தில் நடிக்கிறேனா? திடீர்னு என்னை பார்க்கணும்னு நினைக்கிறவங்களுக்கு, "வெப்சைட் இருக்கு. அதிலேயே என்னை பார்த்துக்கோங்களேன்"னு சொல்லிடுறேன். அதுக்காகதான் இந்த வெப்சைட் என்றார்.
ஏடாகூடமா மெயில் வந்தா, என்ன செய்வாங்களாம்
No comments:
Post a Comment