ஈழம் என்றதும் வீரம்வரும் சிலரில் அமீரும் ஒருவர். ஈழத் தமிழருக்கு ஆதரவாகப் பேசி சிறை சென்ற பின்னும் அவரது சீற்றம் குறையவில்லை.
அமீர் சினிமா கலைஞனல்லவா... ஈழத்தின் சோகத்தை செல்லுலாயிடில் செதுக்க வேண்டும் என்று அடிக்கடி கூறிக் கொண்டிருப்பார். ஈழத்தைப் பற்றி படமெடுப்பேன் என்று மேடையிலேயே முழங்கியிருக்கிறார். அது வெறும் பேச்சல்ல.
யோகி படத்தின் இறுதிகட்ட பணியில் இருப்பவர் ஈழம் குறித்த படத்தின் கதை விவாதத்தை நடத்தி வருகிறாராம். படத்துக்கு கிளிநொச்சி என்று பெயர் வைக்கவும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அமீரைப் போலவே ஈழப் பிரச்சனையை பிரதிபலிக்கும் படத்தை எடுக்கவுள்ளார் சீமான். அஜித் நடிக்கும் படத்துக்குமுன் இப்படம் தயாராகவுள்ளது. அனேகமாக படத்துக்கு கோபம் என பெயரிடப்படலாம் என தெரிகிறது.
No comments:
Post a Comment