Monday, September 16, 2013
நடிகர்களின் சம்பளத்தைக் கேட்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது - பாலுமகேந்திரா!
நடிகர் ராஜேஷின் மகன் தீபக் ராஜேஷ் ஹீரோவாக அறிமுகமாகும் படம் பயணங்கள் தொடர்கின்றன. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிப்பவர் அஞ்சனா மேனன். படத்தை இயக்குகிறார் தேஷ்வின் ப்ரேம். படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை தீபக்குக்கு வந்த உடனேயே அதை ராஜேஷிடம் சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட ராஜேஷ், ‘கொஞ்ச நாள் பொறு நானே படத்தைத் தயாரிக்கிறேன்…’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அதற்குள் ராஜேஷின் மகனது நடிப்பு ஆசையைத் தெரிந்து கொண்ட தயாரிப்பாளரும் இயக்குநரும் தீபக்கிடம் பயணங்கள் தொடர்கின்றன படத்தின் கதையைச் சொல்லியிருக்கிறார்கள். கதை பிடித்துப் போக உடனே படப்பிடிப்பை துவக்கிவிட்டார்கள்.
இந்தப் படத்தின் படத்துவக்க அறிமுக விழா சென்னையில் உள்ள க்ரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் கேயார், ராஜ்கண்ணு, பாலுமகேந்திரா பயணங்கள் தொடர்கின்றன படத்தின் இயக்குநர் தயாரிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய பாலுமகேந்திரா, ‘இன்று தமிழ் சினிமாவின் ஹீரோக்களின் சம்பளத்தைக் கேட்கும் போது மிகப்பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. தீபக் ராஜேஷிடம் நான் ஒ வேண்டுகோள் வைப்பேன். நீங்கள் வளர்ந்து நிறைய படம் பண்ணினாலும் என்றைக்குமே சரி ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் குறைந்த சம்பளம் கிடைக்கிறதே என்பதற்காக நல்ல கதையில் நடிக்காமல் இருந்துவிடாதீர்கள்… இது என் கட்டளை அல்ல… வேண்டுகோள்…” என்று பேசினார். ஏராளமான திரையுலக பிரபலங்கள் வந்திருந்து பயணங்கள் தொடர்கின்றன குழுவினரை வாழ்த்தினார்கள்.
தாம்பத்ய உறவை மேம்படுத்த உதவும் கற்றாழை!
நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை
பல மருந்து தன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது.
இயற்கையாக வளரும் கற்றாழையில் எத்தனையோ விதமான மருத்துவக் குணங்கள் உள்ளன.
கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க்
கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை, ரயில் கற்றாழை எனப் பலவகை உண்டு.
இதில்
சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கு என்று பயன்படுத்தப்பட்டு
வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள், ரெசின்கள் பாலிசக்கரைடு
மற்றும் ஆலோக்டின்பி எனும் பல வேதிய பொருட்கள் உள்ளன. கற்றாழையில் இருந்து
வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் மூசாம்பரம் எனப்படுகிறது.
கற்றாழை
உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும்
மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு கற்றாழை மட்டிலும்
மருத்துவத்திற்கும், காஸ்மெட்கிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம்
பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழை என கூறப்படுகிறது.
சோற்றுக்
கற்றாழை மடல்கள் பிளந்து நொங்குசுளை போல உள்ள சதைப்பகுதியை சிறு சிறு
துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் நன்றாக கழுவி எடுத்துக் கொண்டு
மருந்தாகப் பயன்படுத்த வேண்டும். கற்றாழைக் கையால் தொட்டால் வாய் கசக்கும்
என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும்,
கசப்பும் குறைந்துவிடும்.
சோற்றுக்
கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து இட்லிப்
பானையில் பால் விட்டு வேர்களை தட்டில் வைத்துப் ஆவியில் வேக வைத்து
எடுத்து நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு தினசரி ஒரு
தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்ய உறவு மேம்படும்.
தாம்பத்ய உறவுக்கு கற்றாழை நிகரற்ற மருந்தாகும்.
Subscribe to:
Posts (Atom)

